திருமணமான 4 மாதத்தில் நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!


திருமணமான 4 மாதத்தில் நடத்தையில் சந்தேகம்: காதல் மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!
x
தினத்தந்தி 4 April 2022 6:38 AM IST (Updated: 4 April 2022 6:38 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

கோவை,

கோவையில் நடத்தையில் சந்தேகப்பட்டு புதுப்பெண் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசில் கூறியதாவது:-

கோவை சுந்தராபுரம், காந்திநகர் 3-வது வீதியை சேர்ந்தவர் நாகார்ஜுனன் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி சர்மிளா (27). இவர்கள் 2 பேரும் காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து அவர்கள் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். 

இந்த நிலையில் நாகார்ஜுனனுக்கு குடிபழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் காதல் மனைவியின் நடத்தையிலும் நாகார்ஜுனன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணியளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த நாகார்ஜுனன், அங்கு கிடந்த கத்தியால் காதல் மனைவி சர்மிளாவை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து, மார்பு, வயிறு உள்பட 8 இடங்களில் பலத்த கத்திக்குத்து விழுந்ததில் சர்மிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து வீட்டைவிட்டு நாகார்ஜுனன் தப்பிச்சென்றுவிட்டதால் சர்மிளா வீட்டில் இறந்து கிடந்தது யாருக்கும் தெரியவில்லை. இதற்கிடையில் இரவு 8 மணியளவில் நண்பர்களுடன் மீண்டும் மதுகுடித்த நாகார்ஜுனன், மனைவியை கத்தியால் குத்தி கொன்றதாக கூறியுள்ளார். அதன்பின்னர் தான் மற்றவர்களுக்கு தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சர்மிளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதுங்கியிருந்த நாகார்ஜுனனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் சர்மிளாவுக்கு திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணை நடந்து வருகிறது.

நடத்தையில் சந்தேகம் காரணமாக திருமணமான 4 மாதத்தில் காதல் மனைவியை கணவர் குத்திக்கொன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story