பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா- ஆயிரம் குழந்தைகளுக்கு நேர்ச்சை நிறைவேற்றம்....!


பத்ரகாளி அம்மன் கோவில் தூக்க திருவிழா- ஆயிரம் குழந்தைகளுக்கு நேர்ச்சை நிறைவேற்றம்....!
x
தினத்தந்தி 4 April 2022 5:00 PM IST (Updated: 4 April 2022 5:02 PM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் மீனபரணி தூக்க திருவிழா விமர்சியாக நடைபெற்றது.

கொல்லங்கோடு,

குமரி மாவட்டத்தில் பிள்ளை தூக்கம் நடைபெறும் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில். இந்த கோவிலில் மீனபரணி தூக்கத்தேர் திருவிழா கடந்த மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்களாக நடந்து வருகிறது. 

10-ம் திருவிழா நாளான இன்று அதிகாலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்வு பக்தி பரவசத்துடன் துவங்கியது.
 
முன்னதாக பச்சை பந்தலில் அம்மன்கள் இரண்டு பேரும் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். தொடர்ந்து தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்க தேரில் பொருத்தியிருந்த இரண்டு வில்லிலும் நான்கு தூக்கக்காரர்கள் கையில் வாள் மற்றும் பரிவட்டத்துடன் ஏறி கோவிலை சுற்றி வலம் வந்து தூக்கத்தை துவக்கி வைத்தனர். 

அதனை தொடர்ந்து 1098 பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை வரிசையாக நடத்தப்பட்டது. இந்த நேர்ச்சையானது நான்கு வில்லில் நான்கு குழந்தைகளுடன் தூக்கக் காரர்கள் 48 அடி உயரத்தில் அந்தரத்தில் தொங்கியபடி குழந்தைகளை சுமந்து கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வந்து நேர்ச்சை முடித்து வைக்கப்படுகிறது.

இந்த விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு  மீனபரணி தூக்க திருவிழாகை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story