ராஜீவ்காந்தி கல்லூரியில் துப்புரவு பணி


ராஜீவ்காந்தி கல்லூரியில் துப்புரவு பணி
x
தினத்தந்தி 4 April 2022 10:39 PM IST (Updated: 4 April 2022 10:39 PM IST)
t-max-icont-min-icon

யுவர் பேக்கர்ஸ் அறக்கட்டளை சார்பில் ராஜீவ்காந்தி கல்லூரியில் துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி யுவர் பேக்கர்ஸ் அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்தோடு பல்வேறு இடங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தவளக்குப்பம் ராஜீவ்காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துப்புரவு பணி நடந்தது. 
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் செரைல் ஆன் சிவன், கல்லூரி என்.எஸ்.எஸ். தலைவர் சத்தியா ஆகியோர் முன்னிலையில் துப்புரவு பணி நடந்தது. இதில் யுவர் பேக்கர்ஸ் அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணராஜூயின் வழிகாட்டுதலின்படி துணை நிறுவனர்கள் முருகன், பிரகாஷ் மற்றும் அகிலன் ஆகியோருடன் 30-க்கும் மேற்பட்ட யுவர் பேக்கர்ஸ் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு கல்லூரி வளாகத்தை சுற்றி இருந்த குப்பைகளை அகற்றினர். இதில் சுமார் 1 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது.


Next Story