ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி
புதுவை தீயணைப்புத்துறை சார்பில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி வழங்கப்பட்டது.
புதுவை தீயணைப்புத்துறை சார்பில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. குறிப்பாக வெகுதூரத்தில் உள்ள இடங்களில் உள்ள நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்புத் துறையினர் வரும் முன்பாகவே தீயை அணைப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன்படி காலாப்பட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுவை தீயணைப்பு நிலைய அதிகாரி முகுந்தன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சந்தோஷ்குமார், கணேசன், கதிரேசன், மதன்குமார் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். தண்ணீர், ரசாயன புகை ஆகியவற்றைக்கொண்டு தீயை அணைப்பது, தீ விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுவது குறித்தும் அவர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
Related Tags :
Next Story