குழந்தைகளுக்கு சட்டவிரோதமாக பாஸ்போர்ட்: முன்னாள் மனைவிக்கு எதிராக இசையமைப்பாளர் வழக்கு
குழந்தைகளுக்கு சட்டவிரோதமாக பாஸ்போர்ட்: முன்னாள் மனைவிக்கு எதிராக இசையமைப்பாளர் வழக்கு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
பிரபல இசையமைப்பாளர் டி.இமான் கடந்த 2018-ம் ஆண்டு தனது மனைவி மோனிகாவை விவாகரத்து செய்தார். இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது 2 குழந்தைகளின் பாஸ்போர்ட் என்னிடம் உள்ளன. ஆனால், அந்த பாஸ்போர்ட்டுகள் தொலைந்துவிட்டதாகக் கூறி மோனிகா புதிய பாஸ்போர்ட் வாங்கியுள்ளார். இது சட்டவிரோதம். எனவே, என் குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு மனு கொடுத்தேன். ஆனால், ஐகோர்ட்டு உத்தரவு இல்லாமல், அவ்வாறு ரத்து செய்ய முடியாது என்று அதிகாரி கூறினார். என் குழந்தைகளை நான் சந்திக்க கூடாது என்பதற்காக அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப மோனிகா இவ்வாறு செயல்படுகிறார். எனவே, இந்த பாஸ்போர்ட்டுகளை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இதுதொடர்பாக தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, மோனிகா ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Related Tags :
Next Story