ராமநாதபுரத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி வகுப்புகள் தொடங்கின
மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் நேற்று முதல் வகுப்புகள் தொடங்கின.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு தற்காலிகமாக வகுப்புகள் தொடங்குவதற்காக, அங்கு 5-வது தளத்தில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
50 மாணவர்கள் கல்வி கற்கும் வகையில், அங்கு நவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங்கள், மாணவ- மாணவிகள் விடுதி கட்டிடங்கள், நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நேற்று முதல் எய்ம்ஸ் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. வந்திருந்த மாணவ- மாணவிகள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின்னர் வகுப்புக்கு சென்றனர்.
இயக்குனர் பேட்டி
முன்னதாக மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி இயக்குனர் ஹனுமந்தராவ், வகுப்புகள் மற்றும் ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இங்குள்ள மாணவர்களுக்காக உடற்கூறு இயல், உடல் இயங்கு இயல், பயோகெமிஸ்ட்ரி மற்றும் சமூகம் சார்ந்த மருத்துவத் துறைக்கு 8 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்துள்ளனர். இதுதவிர, ஆந்திர மாநிலம் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இருந்து 6 பேராசிரியர்கள் இணையதளம் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்கள்.
கட்டுமான பணி
மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு முதல் கட்டமாக 200 ஏக்கரில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றுள்ளது. இன்னும் 6 மாதங்களில் கட்டுமான பணி தொடங்கி நடைபெற உள்ளது.
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடங்கள் கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story