தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை


தூக்குப்போட்டு கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2022 9:42 PM IST (Updated: 5 April 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

திருமண ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோரிமேடு அருகே ஆலங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பாலு (வயது 30). கொத்தனார். இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். 
இந்த நிலையில் தனது தாயாரிடம், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வலியுறுத்தினார். அவரும் பெண் பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு சரியான திருமண வரன் அமையாததால் பாலு மனவேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலு  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story