கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழக அரசு அறிவிப்பு


கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 5 April 2022 10:09 PM IST (Updated: 5 April 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

2021-ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜுன் 3 ஆம் தேதியன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ வழங்கி கவுரவிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதழியல் துறையில் சமூக மேம்பாட்டுக்காகவும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டுக்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ‘கலைஞர் எழுதுகோல் விருது’ ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அந்த வகையில், 2021 ஆம் ஆண்டுக்கான இந்த விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு;-

“விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும்.

பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும். விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின்பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.”

மேற்காணும் தகுதிகளைக் கொண்டவர்கள் தங்கள் விவரங்கள் அடங்கிய விண்ணப்பங்களை அவற்றுக்குரிய ஆவணங்களுடன் தலைமைச் செயலகத்திற்கு வருகின்ற 30 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story