"அ.தி.மு.க. ஆட்சி ராம ராஜ்ஜிய ஆட்சியாக இருந்தது" - செல்லூர் ராஜூ


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 April 2022 10:22 PM IST (Updated: 5 April 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

"அ.தி.மு.க. ஆட்சி ராம ராஜ்ஜிய ஆட்சியாக இருந்தது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

சொத்து வரி உயர்வைக் கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பெத்தானியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக மாநகர செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

திமுக தற்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு மக்கள் நலனில் அக்கறை காட்டாது உள்ளது. திமுக ஆட்சியில் விலைவாசி எல்லாவற்றிலும் உயர்கிறது. அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு பணம், பொருள் என மக்கள் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் வழங்கினோம். ஆனால்  தி.மு.க அரசு சொத்து வரி உயர்வை உயர்த்தியுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி ராம ராஜ்ஜிய ஆட்சியாக இருந்தது. தமிழகமே ராம ராஜ்ஜிய ஆட்சி தான். ராமனுக்கு சீதை போல எம்.ஜி.ஆருக்கு ஜானகி இருந்தார். அ.தி.மு.க. அமைதியான ஆட்சியை நடத்தியது.  அ.தி.மு.க ஆட்சியில் மக்கள் அமைதியாக இருந்தனர்.

திமுக ஆட்சியில் பாலியல் தொல்லை, கட்ட பஞ்சாயத்து அதிகரித்துவிட்டது. போலீசாருக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு செல்லூர் ராஜூ கூறினார்.

Next Story