புதுச்சேரி, காரைக்காலில் 3 வாக்கு மையங்கள்


புதுச்சேரி, காரைக்காலில் 3 வாக்கு மையங்கள்
x
தினத்தந்தி 5 April 2022 10:34 PM IST (Updated: 5 April 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் யொட்டி புதுச்சேரி, காரைக்காலில் 3 வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வருகிற 10-ந் தேதி நடக்கிறது. ஜனாதிபதி பதவிக்கு 12 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். தேர்தலில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை பிரெஞ்சு தூதரகம் செய்து வருகிறது. அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் (புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில்) வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் வாக்களிக்க கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்சு துணை தூதரகத்திலும், பிரெஞ்சு பள்ளியிலும் வாக்கு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல் காரைக்காலிலும் ஒரு வாக்கு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  வருகிற 10-ந் தேதி காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்களிக்கலாம். தேர்தலில் வாக்களிக்க வருபவர்கள் பிரெஞ்சு  குடியுரிமைக்கான அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.

 

Next Story