மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காரைக்காலை அடுத்த திருபட்டினம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, புதுவையில் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காரைக்காலை அடுத்த திருபட்டினம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலக் குழு உறுப்பினர் வின்சென்ட் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் நிலவழகன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story