உத்தரபிரதேச வாலிபர் சைக்கிள் பயணம்


உத்தரபிரதேச வாலிபர் சைக்கிள் பயணம்
x
தினத்தந்தி 5 April 2022 11:47 PM IST (Updated: 5 April 2022 11:47 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச வாலிபர் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிளில் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர் பிரதீப் (வயது 20). இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் சைக்கிளில் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 20-ந்தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களை கடந்த அவர் இன்று புதுச்சேரி வந்தார். வழியில் பொதுமக்கள் வழங்கும் உணவுகளை சாப்பிடும் இவர் இந்த ஆண்டு இறுதியில் தனது பிரசார பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளார்.


Next Story