தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு? - அமைச்சர் சிவசங்கர் பதில்


தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்வு? - அமைச்சர் சிவசங்கர் பதில்
x
தினத்தந்தி 5 April 2022 11:59 PM IST (Updated: 5 April 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-

சென்னையில் 2 ஆயிரம் அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்தப்படும். பயணிகளின் முகங்களை அறியும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கேமராக்கள் அமைக்கப்படும். அதேபோல், பஸ்களில் பெண்களின் வசதிக்காக அவசரகால பட்டன்களும் நிறுவப்படும். 

சிசிடிவி, அவசரகால பட்டன்கள் ஆகியவை கட்டுப்பாட்டு அறையுடன் ஒருங்கிணைக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். 

புதிய பஸ்கள் வாங்குவது தொடர்பாக ஜெர்மன் நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட போதிலும், தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்த தற்போது வாய்ப்பில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story