இருவேறு இடங்களில் 2 மணப்பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை


இருவேறு இடங்களில் 2 மணப்பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 April 2022 1:49 AM IST (Updated: 6 April 2022 1:49 AM IST)
t-max-icont-min-icon

இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள நாலாம் சேத்தியை சேர்ந்தவர் தேவதர்ஷினி(வயது 21). வீட்டுக்கு ஒரே மகளான தேவதர்ஷினி பி.ஏ. பட்டதாரி ஆவார்.

தேவதர்ஷினிக்கும், நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களது திருமணம் இன்று(புதன்கிழமை) கீழ்வேளூரில் நடைபெறுவதாக இருந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

திருமணத்துக்கான ஏற்பாடுகளை கடந்த சில வாரங்களாக மணமக்கள் வீட்டார் தீவிரமாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை தேவதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மற்றொரு மணப்பெண்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் அகல்யா (21). இவருக்கும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்திருந்தனர். இன்று (புதன்கிழமை) இவர்களது திருமணம் திருப்புவனத்தில் நடக்க இருந்தது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த அகல்யா திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அகல்யாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், அதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Next Story