போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x

புளியங்குடியில் சிறுமியை கடத்தி சென்றதாக வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

புளியங்குடி:
புளியங்குடி காலாடி தெருவை சேர்ந்த அமானுல்லா மகன் முகைதீன் அப்துல்காதர் (வயது 22). இவருக்கும் 16 சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி 2 பேரும் திடீரென்று மாயமானார்கள். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் புளியங்குடி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மகேஷ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். 

இந்த நிலையில் சிறுமியுடன் முகைதீன் அப்துல் காதர் புளியங்குடிக்கு வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சிறுமியை கடத்தி சென்றதாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, முகைதீன் அப்துல் காதரை கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 

Next Story