ஜெயங்கொண்டம் அருகே அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு ...!


ஜெயங்கொண்டம் அருகே அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு ...!
x
தினத்தந்தி 6 April 2022 8:30 AM IST (Updated: 6 April 2022 8:28 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் அருகே அரசு மருத்துவமனையில் கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

ஜெயங்கொண்டம், 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான நமது மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி இன்று திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் கட்டிட பணிகள், மற்றும் மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, அறுவை சிகிச்சை அரங்கம், உள்நோயாளிகள் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தார். 

பின்னர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் சரியான அளவில் ஏற்படுத்தி தர வேண்டுமென டாக்டர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சுகாதார வளாகத்தில் நமது மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்த நிகழ்வில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதாராணி, வட்டார மருத்துவ அலுவலர் தெட்சிணாமூர்த்தி, வட்டார சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வாளர்கள் மருத்துவ பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story