திருப்பூர்: இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் - முதியவர் கைது...!
திருப்பூர் அருகே இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 60 வயது முதியவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்,
பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் பகுதியில் வசிக்கும் 21 வயது மதிக்கத்தக்க பெண் வீட்டில் தனியாக இருந்த போது அருகில் வசித்து வரும் உறவினரான டிரைவர் ராஜன் (வயது 60) என்பவர் வீட்டினுள் புகுந்து இளம் பெண்ணை பாலியல் அத்துமீறல் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு வரவே, ராஜன் அங்கிருந்து தப்பியோட முயன்று உள்ளார்.
இதனிடையே பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, தப்பி ஓட முயன்ற ராஜனை பிடித்து பல்லடம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார், பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ராஜனை கைது செய்து பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story