"ஏன்டி என் லவ்வர் கூட பேசுற"தலை முடியை பிடித்து நடுரோட்டில் சண்டை போட்ட கல்லூரி மாணவிகள்
இரண்டு மாணவிகளும் ஒரே ஆளை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை
சென்னை அண்ணாநகர் ரவுண்டானா அருகே பேருந்து நிலையம் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் பகுதியாகும் இதுஇங்கு இருக்கும் பேருந்து நிலையத்திற்கு பொதுவாக கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் வருவது வழக்கம்.
நேற்று இந்த பேருந்து நிலையத்தில் மாணவி ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த இன்னொரு மாணவி, அவரிடம் கடுமையான வார்த்தைகளை சொல்லி திட்டி இருக்கிறார். சுற்றி பொது மக்கள் பலர் இதை பார்த்துக்கொண்டு இருந்தனர். இரண்டு மாணவிகளும் மாறி மாறி திட்டிக்கொண்டு இருந்ததால் அங்கு கூட்டம் கூடியது.
மாணவிகள் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி மாறி மாறி திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல வாய் தகராறு சண்டையில் முடிந்தது. ஒரு மாணவியின் தலைமுடியை இன்னொரு மாணவி பிடித்து இழுத்து அடித்தார். பதிலுக்கு இந்த மாணவியும் அந்த மாணவியின் கன்னத்தில் அறைந்து.. தரையில் தள்ளி தாக்கினார். அங்கிருந்த சக மாணவிகள் சிலர் இதை தடுக்க முயன்றனர்.
ஆனால் யார் சமாதானப்படுத்தியும் நிற்காமல் இரண்டு மாணவிகளும் மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர். இவர்கள் ஏன் சண்டை போட்டுக்கொள்கிறார்கள் என்று தெரியாமல் அங்கிருந்த மக்கள் குழம்பி போய் இருந்தனர். அப்போதுதான் ஒரு மாணவி, ஏன்டி என் லவ்வர் கூட பேசுற என்று கேட்டு இன்னொரு மாணவியை தாக்கினார். சக மாணவர் ஒருவருக்காக இரண்டு மாணவிகளும் அடித்துக்கொண்டது தெரிய வந்தது.
இரண்டு மாணவிகளும் ஒரே ஆளை காதலிப்பதாக கூறப்படுகிறது. இதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு கூடி இருந்த சில மாணவிகள் சேர்ந்து சண்டை போட்ட இரண்டு மாணவிகளையும் பிரித்து வைத்தனர். இது தொடர்பாக போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்கப்படவில்லை. ஆனாலும் இரண்டு மாணவிகளும் மாறி மாறி தாக்கிக்கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.
தலை முடியை பிடித்து கொண்டு நடுரோட்டில் கொடூர தாக்குதல் - கல்லூரி மாணவிகளின் அதிர்ச்சி வீடியோ#college#GirlsFighthttps://t.co/p5N4LGOh8w
— Thanthi TV (@ThanthiTV) April 5, 2022
Related Tags :
Next Story