மின் வெட்டு: பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் - அமைச்சர் செந்தில் பாலாஜி
சமூக வலைத்தளங்களில் மின் வெட்டு என்ற பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை,
மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மின் வெட்டு ஏற்பட்டால் 24 மணி நேரமும் மின்னகத்தை தொடர்பு கொள்ளலாம். சமூக வலைத்தளங்களில் மின் வெட்டு என்ற பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம்.
18,000 மெகா வாட் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சொந்த உற்பத்தியை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மின் தேவையை பூர்த்தி செய்ய மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
Related Tags :
Next Story