கொரோனா குறைந்து வருகிறது என கவனக்குறைவாக இருக்கக்கூடாது - மருத்துவத்துறை செயலாளர் அறிவுரை


கொரோனா குறைந்து வருகிறது என கவனக்குறைவாக இருக்கக்கூடாது - மருத்துவத்துறை செயலாளர் அறிவுரை
x
தினத்தந்தி 6 April 2022 9:03 PM IST (Updated: 6 April 2022 9:03 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா குறைந்து வருகிறது என கவனக்குறைவாக இருக்கக்கூடாது என்றும், தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என மருத்துவத்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 20 பேர் என இருந்து வரும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டம் என்ற இலக்கை எட்டுவதற்கு பதிலாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருப்பூர், சேலம் உள்ளிட்ட ஓரிரு மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகள் தற்போது வரை தொடர்கிறது.

கொரோனா பாதிப்பு தற்போது வரை இருந்து வருவதால் மேற்கண்ட நடைமுறையை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பன போன்றவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story