குடிநீர் நிலையம் சூறை


குடிநீர் நிலையம் சூறை
x
தினத்தந்தி 6 April 2022 10:07 PM IST (Updated: 6 April 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

திருக்கனூர் அருகே குடிநீர் திறப்பு நிலையத்தை சூறையாடிய 4 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருக்கனூர் அருகே உள்ள விநாயகம்பட்டு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குடிநீர் திறப்பு நிலையம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் 4 பேர் அமர்ந்து மது குடித்தனர். குடிபோதையில் அவர்கள் அங்கிருந்த கதவு, மின்சாதன பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடிவிட்டு தப்பி ஓடி விட்டனர். 
இதனையறிந்த குடிநீர் திறப்பு நிலைய ஊழியர் பொன்னுசாமி திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில் விநாயகம்பட்டு கிராமத்தை சேர்ந்த வேலு, பூவரசன், தமிழரசன், வி.பி.கிருஷ்ணன் ஆகியோர் தான் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story