மாணவர்கள் உண்ணாவிரதம்
தாகூர் கலைக்கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவுகூறும் வகையில் தாகூர் கலைக்கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் தலைமையில் மாணவர்கள் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை தொடங்கிய 3-வது நாளில் பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், யாத்திரையை அனுமதிக்கக்கோரியும் தாகூர் கலைக்கல்லூரி முதல்வர் சசிகாந்ததாஸ் தரையில் அமர்ந்து பணி செய்து வருகிறார். அவருக்கு தத்துவத்துறை பேராசிரியர் சம்பத்குமாரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களது போராட்டத்துக்கு ஆதரவாக மாணவர்களும் அவ்வப்போது வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story