இன்றும் நாளையும் மின்தடை
புதுச்சேரியில் இன்றும், நாளையும் மின்தடை செய்யும் இடங்களை மின்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் இன்றும், நாளையும் மின்தடை செய்யும் இடங்களை மின்துறை அறிவித்துள்ளது.
மின்தடை
புதுச்சேரியில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் இடங்கள் விவரம் வருமாறு:-
புதுவை அகரம் மின்பாதையில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதனால் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை வில்லியனூர், பத்மினி நகர், வசந்தம் நகர், ஆத்துவாய்க்கால்பேட், திருக்காமீஸ்வரர் நகர், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், கிருஷ்ணா நகர், பாண்டியன் நகர், சேந்தநத்தம், சுல்தான்பேட், அரசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
பூமியான்பேட்டை
வில்லியனூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடப்பதால் கோபாலன் கடை, புதுநகர், அம்மா நகர், அன்பு நகர், முத்துப்பிள்ளைபாளையம், பிச்சவீரான்பேட், ராதாகிருஷ்ணன் நகர், பாவேந்தர் நகர், சுப்ரமணிய பாரதி நகர், ரெட்டியார்பாளையம், ஆதிகேசவன் நகர், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜீஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், பூமியான்பேட், ஜவகர் நகர், சிவா நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், ராகவேந்திரா நகர், பொன் நகர், அருள் நகர், சுதாகர் நகர், பவழக்காரன் சாவடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
புதுச்சேரி மரப்பாலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை எல்லை அம்மன் கோவில் தோப்பு, காளியம்மன் கோவில் தோப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம் (4,5-வது குறுக்குத்தெரு), தாமரை நகர், ராஜராஜன் வீதி, முருகசாமி நகர், ஈஸ்வரன் கோவில் தோப்பு, இந்திரா நகர், பாரதிதாசன் வீதி, பிரான்சுவா தோப்பு, ஏழை பிள்ளையார் தோப்பு ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
குருசுக்குப்பம்
இதபோல் குருசுக்குப்பம் (பகுதி), பொன்னையன்பேட்டை (பகுதி), ஒயிட்டவுன் (பகுதி), வைத்திக்குப்பம் (பகுதி) ஆகிய பகுதிகளில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், மகாத்மா காந்தி வீதி (முத்தியால்பேட்டை), சோலை நகர் முழுவதும், அங்காளம்மன் நகர், கணேஷ் நகர் (பகுதி), முத்தியால்பேட்டை (கிழக்கு பகுதி) ஆகிய பகுதிகளில் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையும், திருவள்ளுவர் நகர், முத்தியால்பேட்டை, சூரிய காந்தி நகர், எழில் நகர், வசந்த் நகர், தேவகி நகர், ஆர்.கே.நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், செயிண்ட் சிமோன்பேட், ஜெகராஜ் நகர், கருவடிக்குப்பம் ரோடு, வெள்ளவாரி ரோடு, கர்மேல்மடம், தெபேசான்பேட், விஸ்வநாதன் நகர், ரெயின்போ நகர் 9-வது குறுக்குவீதி, ஆதிபராசக்தி கோவில் சுற்றுவட்டார பகுதி ஆகிய பகுதிகளில் பகல் 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.
நண்பகல் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சித்தன்குடி, நேரு நகர், ராஜீவ் காந்தி நகர், இளங்கோ நகர் (பகுதி), காமராஜ் சாலை (பகுதி), சாந்தி நகர், கோவிந்தசாலை (பகுதி), சாரம், ராஜா அய்யர் தோட்டம், காமராஜர் வீதி (பகுதி), சக்தி நகர், லெனின் வீதி, சத்தியா நகர் (பகுதி) ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
நாளை...
இதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பாரதிவீதி (நீடராஜப்பையர் வீதிக்கும் சவரிராயலு வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), மகாத்மா காந்தி வீதி (நீடராஜப்பையர் வீதிக்கும் சின்ன வாய்க்கால் வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), சவரிராயலு வீதி (பாரதி வீதிக்கும் மகாத்மா காந்தி வீதிக்கும் இடைப்பட்ட பகுதி), செயிண்ட் தெரசா வீதி (சின்ன சுப்ராய பிள்ளை வீதிக்கும் மகாத்மா காந்தி வீதிக்கும் இடைப்பட்ட பகுதி) குளத்து மேட்டு வீதி முழுவதும் மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை புதுச்சேரி மின்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story