ஸ்கூட்டர் திருடிய பாசிக் ஊழியர் கைது


ஸ்கூட்டர் திருடிய பாசிக் ஊழியர் கைது
x
தினத்தந்தி 6 April 2022 11:36 PM IST (Updated: 6 April 2022 11:36 PM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டரை திருடிய பாசிக் ஊழியர் போலீசார் கைது செய்தனர்.

வானூர் அருகே தைலாபுரம் திடீர் நகரை சேர்ந்தவர் சக்திவேல். புதுச்சேரி பாரதி வீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 3-ந் தேதி காலை தனது கடை வாசலில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு சென்றார். மாலை வெளியே வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் காணாமல் போயிருந்தது. உடனே ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது ஸ்கூட்டரை ஒருவர் திருடி சென்றது பதிவாகி இருந்தது.
இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் சக்திவேல் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், புதுச்சேரி கந்தப்ப முதலியார் வீதியை சேர்ந்த பாசிக் ஊழியர் ஸ்டாலின் (வயது 52) என்பது தெரியவந்தது. ஸ்டாலினை கைது செய்த போலீசார் அவரது வீட்டில் நிறுத்தியிருந்த ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்தனர்.

Next Story