40 பவுன் நகை கேட்டு மனைவிக்கு வரதட்சணை கொடுமை


40 பவுன் நகை கேட்டு மனைவிக்கு வரதட்சணை கொடுமை
x
தினத்தந்தி 7 April 2022 12:02 AM IST (Updated: 7 April 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

40 பவுன் நகை கேட்டு மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்ததால் என்ஜினீயர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

புதுவை சொக்கநாதன்பேட்டையை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இவரது மனைவி வள்ளியம்மை. இவர்களது மகன் சிவ விக்னேஷ்வரா (வயது 31). என்ஜினீயர். இவருக்கும் தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்த நிரஞ்சனா தேவி (28) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
திருமணத்தின்போது மணப்பெண் வீட்டார் 60 பவுன் நகையும், ரூ.12 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் சீதன பொருட்களை வழங்கினர். திருமணம் முடிந்து 3 மாதத்தில் சிவ விக்னேஷ்வரா அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்றார். அதையடுத்து சிலமாதங்களில் நிரஞ்சனா தேவியையும் அழைத்து செல்வதாக கூறினார். ஆனால் அவரை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லவில்லை. இதுபற்றி கேட்டபோது 100 பவுன் நகை கொடுத்தால்தான் அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு சிவ விக்னேஷ்வரா புதுவை திரும்பினார். அப்போது அவரும், அவரின் பெற்றோரும் நிரஞ்சனா தேவியிடம் கூடுதலாக 40 பவுன் நகையை வரதட்சணையை வாங்கினால் தான் சேர்ந்து வாழ முடியும் என கூறியதாக தெரிகிறது.
இதுகுறித்து வில்லியனூர் மகளிர் போலீசில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக நிரஞ்சனா தேவி புகார் அளித்தார். அதன்பேரில் சிவ விக்னேஷ்வரா, சிவ சுப்ரமணியன், வள்ளியம்மை ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Next Story