திண்டுக்கல்: போலீசாரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது...!


திண்டுக்கல்: போலீசாரை தாக்கிய 4 வாலிபர்கள் கைது...!
x
தினத்தந்தி 7 April 2022 2:30 PM IST (Updated: 7 April 2022 2:18 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டியின் போது போலீசாரை தாக்கிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

குள்ளனம்பட்டி, 

திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு பணிக்காக 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாணார்பட்டி தனிப்பிரிவு போலீசார் மோகன் (39) கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். 

இந்த நிலையில் கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மோகனை கயிறு, உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். 

இதில் காயமடைந்த மோகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் போலீசாரை தாக்கிய நபர்கள் குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது போலீசாரை தாக்கிய மரிய செரோம்(24), எடிசன்(23), சைமன் செபாஸ்டியன்(20), ரிச்சர்ட் சச்சின்(24) ஆகிய 4 பேரை சாணார்பட்டி போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story