உயரும் டீசல் விலை: விரைவில் லாரிகள் வேலை நிறுத்தம்..!


உயரும் டீசல் விலை: விரைவில் லாரிகள் வேலை நிறுத்தம்..!
x
தினத்தந்தி 7 April 2022 2:46 PM IST (Updated: 7 April 2022 2:46 PM IST)
t-max-icont-min-icon

டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார்.

சென்னை,

டீசல் விலை உயர்வை கண்டித்து விரைவில் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநில செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, "டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, விலையை ஒருசில நாட்களுக்குள் கொண்டுவரவேண்டும் என மத்திய அரசுக்கு மனு ஒன்றை அளிக்க உள்ளோம். 

இந்த மனுவை அரசானது உதாசினம் செய்யுமானால், நாங்கள் வேலை நிறுத்தம் செய்வதாக ஆலோசனைக்கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்". இவ்வாறு அவர் கூறினார்.


Next Story