மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறைவு...!


மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நிறைவு...!
x
தினத்தந்தி 7 April 2022 3:51 PM GMT (Updated: 2022-04-07T21:21:56+05:30)

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

மதுரை,

மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சி மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு ஆகும். இந்த மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200, ரூ.500 கட்டண டிக்கெட்டுகள், தெற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் கட்டணமில்லா தரிசன முறையிலும் அனுமதிக்கப்பட உள்ளனர். அதில் 500 ரூபாய் டிக்கெட்டில் 2,500 பேரும், 200 ரூபாய் டிக்கெட்டில் 3,200 பேரும் அனுமதிக்கப்பட உள்ளனர். 

500 ரூபாய் பதிவில் 2 டிக்கெட்டுகளும், 200 ரூபாய் பதிவில் 3 டிக்கெட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் 500, 200 ரூபாய் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியாது.

இந்த டிக்கெட்டுகள் கோவில் இணையதளத்தில் கடந்த 4-ந் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவில் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உள்ள சிறப்பு விற்பனை மையத்தில் பக்தர்கள் வரிசையில் நின்று பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், மீனாட்சி அம்மன் திருக்கல்யாண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இன்று நிறைவு பெற்றுள்ளது. பதிவு செய்த விண்ணப்பங்களுக்கு 8-ந் தேதி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டணச்சீட்டு, ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Next Story