புதுவை கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு பொருந்தாது
பல்கலைக்கழகங்களுக்கான ‘கியூட்’ நுழைவுத்தேர்வு புதுவை கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று முன்னாள் எம்.பி. யும், மேற்கு மாநில அ.தி.மு.க. அவைத் தலைவருமான ராமதாஸ் கூறியுள்ளார்.
பல்கலைக்கழகங்களுக்கான ‘கியூட்’ நுழைவுத்தேர்வு புதுவை கல்லூரிகளுக்கு பொருந்தாது என்று முன்னாள் எம்.பி. யும், மேற்கு மாநில அ.தி.மு.க. அவைத் தலைவருமான ராமதாஸ் கூறியுள்ளார்.
புதுவை மேற்கு மாநில அ.தி.மு.க. அவைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நுழைவுத்தேர்வு
சமீபத்தில் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத்தேர்வு (கியூட் தேர்வு) புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படும் 10 விதமான 5 ஆண்டு ஒருங்கிணைந்த மேற்படிப்புகளுக்கு மட்டும் பொருந்தும். புதுவை யூனியன் பிரதேசத்தில் உள்ள கலைக்கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் ஆகியவை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக இருந்தாலும் 2022-23 ம் ஆண்டிற்கான இக்கல்லூரிகளில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு இந்த நுழைவுத்தேர்வு பொருந்தாது. இந்த கல்லூரிகளில் சேர்க்கை எப்போதும் பிளஸ்-2 மதிப்பெண் அடிப் படையிலேயே சென்டாக் மூலம் நடைபெறும்.
புதுவை பல்கலைக்கழகமும் நுழைவுத்தேர்வை பற்றி கட்டாயப்படுத்தாது. ஆனால் பிளஸ்-2 முடித்துவிட்டு பல் கலைக் கழகத்தில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டமேற் படிப்பு சேர விரும்பும் மாணவர்கள் மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வினை எழுத வேண்டியிருக்கும். கடந்த ஆண்டும் இப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வை புதுவை பல்கலைக்கழகம் நடத்தியது. இப்போது தேசிய தேர்வு முகமை மூலம் நடைபெற உள்ளது.
சமத்துவ நிலை
இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இந்தியாவில் உள்ள 45 பல்கலைக்கழகங்களில் 3-ஐ தேர்வு செய்து அதில் ஒன்றில் மதிப்பெண்கள் அடிப்படையில் சேரலாம். தேர்வுகள் 3 அங்கங்களை கொண்டிருக்கும். அவை மொழியறிவு, பாட அறிவு, பொது அறிவு ஆகும். இந்த நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் போதிய அனுபவம் இல்லாததால் பாதிக்கப்படுவர்.
மாணவர்கள் சேர்க்கை பாதிக்காதவண்ணம் பாதுகாக்க புதுவை அரசு புதுவை பல்கலைக்கழகத்தில் 2 முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கவேண்டும். சி.பி.எஸ்.இ. மற்றும் மாநில வாரிய கல்வி திட்டத்தில் படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என்பது அதில் ஒன்று. இதை ஏற்றுக்கொண்டால் புதுவை பல் கலைக்கழகம் அதற்கான நடைமுறையை கடைபிடித்து இருதரப்பு மாணவர்களிடையே ஒரு சமத்துவ நிலையை உருவாக்கும். அதனால் பாதிப்பினை தவிர்க்கலாம்.
25 சதவீத இடஒதுக்கீடு
மேலும் புதுவை பல்கலைக்கழகத்தில் அளிக்கப்படும் 10 ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டமேற்படிப்பு வகுப்புகள் புதுச்சேரி கல்லூரிகளில் இல்லை. எனவே இந்த படிப்பு களுக்கு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்.
எதிர்காலத்தில் இந்திய அளவில் எல்லா கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் அளிக்கப்படும் இளங்கலை பாடங்களை மாற்றுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யும். அதன் அடிப்படையில் புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கலைக்கல்லூரிகளில் பாடத்திட்டத்தை மாற்றுவதற்கு அரசு தற்போது இருந்தே தயாராகிக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story