ரூ.43 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகள்
நெடுங்காடு தொகுதியில் ரூ.43 லட்சம் செலவில் முடிவடைந்த குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கிவைத்தார்.
நெடுங்காடு தொகுதியில் ரூ.43 லட்சம் செலவில் முடிவடைந்த குடிநீர் திட்டப்பணிகளை அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கிவைத்தார்.
நீர்உந்து நிலையம்
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட பஞ்சாட்சரபுரம், புத்தகுடி, மேல கோட்டுச்சேரி பேட் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக பஞ்சாட்சரபுரம் மற்றும் மேல கோட்டுச்சேரி பேட் பகுதிகளில் ரூ.43 லட்சம் செலவில் ஆழ்துளை கிணறு, நீர் உந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து, ஆழ்துளை கிணறு மற்றும் நீர் உந்து நிலையத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமை தாங்கி, ஆழ்துளை கிணறு மற்றும் நீர்உந்து நிலையத்தை தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், பொதுப் பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகரன், நீர்ப்பாசனம் மற்றும் பொது சுகாதாரம் கோட்ட நிர்வாக பொறியாளர் வீரசெல்வம், உதவி பொறியாளர்கள் மகேஷ், சிதம்பரநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் கோரிக்கை
விழாவில் கலந்துகொண்ட பொதுமக்கள் சிலர், இப் பகுதியில் ஏராளமான பெண்கள் வெளியிடங்களுக்கு வேலைக்கு சென்று விட்டு, மாலை 6 மணிக்கு மேல்தான் வீட்டிற்கு வருகிறார்கள். அதனால், அரசு காலக்கெடுபடி தண்ணீரை பிடிக்க முடியவில்லை. எனவே காலையும், மாலையும் கூடுதலாக 30 நிமிடங்கள் குடிநீர் வினியோகிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். அதற்கான நடவடிக்கையை உடனே மேற்கொள்வதாக அமைச்சர் உறுதி அளித்து சென்றார்.
Related Tags :
Next Story