பட்டா கத்தியுடன் வாலிபர் கைது


பட்டா கத்தியுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 April 2022 5:10 PM GMT (Updated: 2022-04-07T22:40:28+05:30)

காரைக்காலில் பட்டா கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் போலீசார் சந்தைதிடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தபோது, அவரது இடுப்பில் பட்டா கத்தியை சொருகி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர், திருநள்ளாறு பேட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த விவேக் (வயது 27) என்பதும், பொதுமக்களை மிரட்டுவதற்காக பட்டா கத்தியை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.  

Next Story