போலீஸ் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் 5 பேர் வரவில்லை


போலீஸ் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் 5 பேர் வரவில்லை
x
தினத்தந்தி 7 April 2022 10:57 PM IST (Updated: 7 April 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் 5 பேர் வரவில்லை.

போலீஸ் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் 5 பேர் வரவில்லை.
காவலர் தேர்வு
புதுச்சேரி காவல்துறையில் 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 19-ந் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 4-ந் தேதி கோரிமேட்டில் உள்ள காவலர் சமுதாய நலக்கூத்தில் தொடங்கியது.    காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பிறப்பு, கல்வித்தகுதி, இருப்பிடம், சாதி சான்றிதழ் ஆகிய அசல் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. 4 நாட்கள் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்றுடன் முடிவடைந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த 390 பேரில் 5 பேர் கலந்துகொள்ளவில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிவடைந்த பின்னர் அடுத்த நாள் மருத்துவ பரிசோதனையும் நடந்தது.
அடுத்த வாய்ப்பு
இது குறித்து காவல்துறை தலைமை அலுவலக போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமாரிடம் கேட்டபோது, ‘காவல்துறை பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 5 பேர் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றால் அடுத்த வாய்ப்பாக காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு அந்த பணி வழங்கப்படும்’ என்றார்.

Next Story