7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பா.ஜ.க. வரவேற்பு


7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பா.ஜ.க. வரவேற்பு
x
தினத்தந்தி 8 April 2022 3:46 AM IST (Updated: 8 April 2022 3:46 AM IST)
t-max-icont-min-icon

7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும்: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு பா.ஜ.க. வரவேற்பு.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் மருத்துவக்கல்விக்கான சேர்க்கையில் 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கிய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோரை வணங்கி வாழ்த்தி நன்றி பாராட்டி தமிழக பா.ஜ.க.வின் சார்பில் இந்த தீர்ப்பினை வரவேற்கிறோம்.

அரசு பள்ளியில் படிக்கும் ஏழை-எளிய மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களைப் போல சிறப்பான தனியார் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள வசதி வாய்ப்புகள் இல்லை. ஆகவே அவர்களுக்கான சிறப்பு இட ஒதுக்கீடு அவசியம். 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதால், எந்தப் பிரிவினரும் பாதிக்கப்படுவதில்லை. குறிப்பாக பொதுப்பிரிவினரின் 31 சதவீத ஒதுக்கீடு இதனால் பாதிக்கப்படாது. 69 சதவீத இட ஒதுக்கீட்டில், இந்த உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தை கேட்ட பின் நீதிபதிகள் இடையே குறுக்கிட்டு, அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தி இருந்தால் ‘நீட்’ பயிற்சி மையங்களுக்கான தேவை ஏற்பட்டிருக்காது என்று தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story