தைவான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
தமிழகத்தில் ரூ.1,000 கோடியில் காலணி தொழிற்சாலை தொடங்க தைவான் நாட்டை சேர்ந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை,
காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பில் முன்னணியில் இருந்து வரும் தைவான் நாட்டைச் சேர்ந்த ஹாங்பூ தொழில் குழுமம் தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்க முன்வந்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஹாங்பூ குழுமத்தின் தலைவர் டி.ஒய்.சாங் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்தநிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கர்னி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
20 ஆயிரம் பேருக்கு வேலை
உலகளாவிய அளவில் பிரபல நிறுவனங்களாக இருக்கக்கூடிய நைக், கான்வெர்ஸ், பூமா போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கும், தற்போது ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனம் தான் காலணிகளை தயாரித்து கொடுத்து வருகிறது.
அடுத்த 3 அல்லது 5 ஆண்டுகளில் இந்த தொழிற்சாலை தனது உற்பத்தியை தொடங்கும். இந்த தொழிற்சாலை தொடங்கப்படுவதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு அதிகளவில் வேலை கிடைக்கும்.
இடம் தேர்வு
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழகத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்புக்கான ஒரு முதலீடு ஆகும். இந்த நிறுவனத்துக்கு தைவான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகள் இருக்கின்றன.
இந்த தொழிற்சாலையை தமிழகத்தின் எந்த பகுதியில் தொடங்கலாம் என்பது அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழு ஆலோசித்து வருகிறது. தமிழகத்தின் வட பகுதிகளை அதிகாரிகள் குழு பார்வையிட்டுள்ளனர். மேலும், தென்தமிழகத்தின் சில இடங்களையும் பார்வையிட உள்ளனர்.
பணிகள் ஆரம்பிக்கப்படும்
நில அமைப்பு, சாலை வசதி, மின்சார வசதி போன்றவற்றை ஆராய்ந்து எந்த இடத்தில் தொழிற்சாலை அமைக்கலாம்? என்பது குறித்து முடிவு செய்யப்படும். இடத்தை தேர்வு செய்ததும் உடனடியாக தொழிற்சாலை தொடங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
பொதுவாக தோல் சார்ந்த காலணிகளை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தான் தண்ணீர் பெரிய அளவில் தேவையாக இருக்கும். தற்போது அமைய உள்ள இந்த தொழிற்சாலை, தோல் சாரா காலணி தொழிற்சாலை என்பதால் தண்ணீர் தேவை பெரிய அளவில் இருக்காது.
தொழிற்சாலை அமைய உள்ள 60 முதல் 70 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவில் உள்ளவர்களுக்கு இந்த தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கும். இந்த முதலீடு தமிழகத்தில் காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story