திருவள்ளூர்: காட்டுத் தீயால் மீன்பிடி படகு எரிந்து நாசம்...!


திருவள்ளூர்: காட்டுத் தீயால் மீன்பிடி படகு எரிந்து நாசம்...!
x
தினத்தந்தி 8 April 2022 11:30 AM IST (Updated: 8 April 2022 11:18 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே ஏற்பட்ட காட்டுத் தீயால் மீன்பிடி படகு எரிந்து நாசமாகி உள்ளது.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாகவும் சென்னை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் விளங்குகிறது.  இந்த நீர்த்தேக்கத்தை சுற்றி வனப்பகுதிகள் உள்ளது. 

இந்த பகுதியில் வழக்கத்தை விட நேற்று கோடை வெப்பம் கடுமையாக இருந்ததால் ஏரியின் அருகே திடீரென காய்ந்த சருகுகளில் தீ பற்றி உள்ளது.

இந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த ஆலமரம், மீன்பிடி படகுகள், செடிகொடிகளில் பரபரவி  எரிய தொடங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோ மற்றும் ஞானவேல் உள்ளிட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் கடுமையாகபோராடி தீயை அணைத்தனர்.

உரிய நேரத்தில் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இப்பகுதியில் சட்டவிரோதமாக தினசரி மது அருந்தும் நபர்கள் யாராவது தீயிட்டு கொளுத்தி விட்டார்களா அல்லது வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்ட தீ விபத்தா என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story