தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு


தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 8 April 2022 1:03 PM IST (Updated: 8 April 2022 1:03 PM IST)
t-max-icont-min-icon

வெப்பச்சலனத்தால் டெல்டா மாவட்டங்களிலும் மேற்குத்தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று முதல் ஏப்ரல் 12 வரை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாள்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 10, 11-ல் திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்த வரை அடுத்த 2 நாள்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

Next Story