இந்தியை ஏற்க வேண்டுமா? திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்


இந்தியை ஏற்க வேண்டுமா?  திமுக எம்.பி. கனிமொழி கண்டனம்
x
தினத்தந்தி 8 April 2022 4:10 PM IST (Updated: 8 April 2022 4:10 PM IST)
t-max-icont-min-icon

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என்ற மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும்" என்று உள்துறை மந்திரி அமித்ஷா பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை மந்திரி அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் அதிகரித்து வருகின்றன.
அமித் ஷாவின் பேச்சைத் தொடர்ந்து #stopHindiImposition என்று பலரும் டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய மந்திரி அமித்ஷாவின் கருத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக எம்.பி. கனிமொழி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். மத்திய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Next Story