வாணியம்பாடி அருகே மூதாட்டியிடம் 3 சவரன் செயின் பறிப்பு..! சிசிடிவியில் சிக்கிய மர்ம ஆசாமி
வாணியம்பாடி அருகே மூதாட்டியிடம் செயின் பறித்த நபர்கள் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜனதாபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் ராஜலட்சுமி (வயது 70). இவரது வீட்டின் பக்கத்தில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்ட 2 மர்ம நபர்களில் ஒருவர் கேட்டிற்குள் புகுந்து வீட்டு வாசலில் அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி உள்ளனர்.
இந்த காட்சி அந்த வீட்டின் வெளியே பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ராஜலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story