நெல்லையில் கனமழை: குளம் போல் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
கோடை காலம் தொடங்கி நிலையில் நெல்லை மாநகர் பகுதியில் பலத்த மழை பெய்தது.
நெல்லை:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. நண்பகல் நேரத்தில் வெப்ப நிலை 100 டிகிரி வரை தாக்கி வந்தது.
இதற்கிடையே அவ்வப்போது ஆங்காங்கே கோடை மழையும் பெய்தது. இன்று காலை நெல்லை பகுதியில் வானம் மேகமூட்டாக காட்சி அளித்தது. பின்னர் பரவலாக மழை பெய்தது. காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டு சென்ற மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். பெரும்பாலானோர் குடைபிடித்தபடி சென்றனர்.
நண்பகல் நேரத்தில் கடுமையாக வெயில் அடித்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் மாலை 5.30 மணிக்கு வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் மாநகர பகுதியில் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியம் அருகே மழைநீர் சாலையில் குளம் போல் தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதே போல் நெல்லை புறநகர் மாவட்டத்திலும் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story