எலுமிச்சை விலை கிடுகிடு உயர்வு
புதுவையில் எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
புதுவையில் எலுமிச்சை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எலுமிச்சை
புதுவையில் தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பழரசம், மோர், ஐஸ்கிரீம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். குறிப்பாக வெயிலுக்கு இதமாக பொதுமக்கள் எலுமிச்சை ஜூசை அதிகமாக குடிக்கின்றனர். குறைந்த விலையில் கிடைப்பதாகவும் இது உள்ளது.
அதுமட்டுமின்றி ஓரிரு எலுமிச்சை பழத்தை பிழிந்து வீட்டிலேயே ஜூஸ் தயாரித்து குடும்பத்துடனும் அருந்தி வருகின்றனர். மேலும் சாதம் தயாரிப்பதற்கும் எலுமிச்சை பழத்தை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
கிலோ ரூ.150
பயன்பாடு அதிகரித்துள்ளதால் தற்போது எலுமிச்சை பழத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பெரிய மார்க்கெட்டில் தற்போது கிலோ ரூ.150 வரை விற்பனையாகிறது. பழம் ஒன்று ரூ.8 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது.
முன்பு கிலோ ரூ.25 முதல் ரூ.50 வரை மட்டுமே விற்பனையான எலுமிச்சை பழம் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story