இயற்கை முறையில் விவசாயம் செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும்
இயற்கை முறையில் விவசாயம் செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும் என்று புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவுறுத்தியுள்ளார்.
இயற்கை முறையில் விவசாயம் செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும் என்று புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா அறிவுறுத்தியுள்ளார்.
கைத்தெளிப்பான்
காரைக்கால் செருமாவிளங்கை பகுதியில் இயங்கிவரும் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும விதைத்திட்டம் மூலம், பட்டியலின விவசாயிகளுக்கு கைத்தெளிப்பான் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் சந்திர பிரியங்கா கலந்து கொண்டு 20 விவசாயிகளுக்கு கைத்தெளிப்பானை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இயற்கை முறையில் விவசாயம்
குறிப்பாக வேளாண் கல்லூரி, வேளாண் அறிவியல் நிலையத்தின் ஆலோசனைகளை விவசாயிகள் பயன்படுத்திக்கொண்டு உற்பத்தியை பெருக்கவேண்டும். முக்கியமாக, இயற்கை முறையில் விவசாயம் செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும். அதுதான் எதிர்கால சந்ததியர்களுக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்வை தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், கல்லூரி பேராசிரியர் திருமேனி, விதைத் திட்ட அலுவலர் ராமநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் பேராசிரியர் நடராஜன் நன்றி கூறினார்.
இதற்கிடையே வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது 500 குவிண்டால் அளவுக்கு விதைநெல் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் காலங்களில் 1,000 குவிண்டாலாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story