விஷபூச்சி கடித்ததில் பெண் சாவு


விஷபூச்சி கடித்ததில் பெண் சாவு
x
தினத்தந்தி 8 April 2022 11:46 PM IST (Updated: 8 April 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

விஷபூச்சி கடித்ததில் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி அம்பிகா (வயது 45). கடற்கரையில் பலூன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை விஷ பூச்சி கடித்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதில் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எனவே வீட்டில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று  அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story