கோவில் திருவிழாவில் தகராறு; வாலிபருக்கு கத்தி வெட்டு
வில்லியனூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் வெட்டப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வில்லியனூர் அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்தியால் வெட்டப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வாலிபருக்கு கத்திக்குத்து
வில்லியனூர் அருகே கணுவாப்பேட்டை அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. சாமி ஊர்வலம் நடந்தபோது, சிலையை தூக்குவது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த தண்டபாணி மகன் செல்வத்துக்கும் (வயது 25), அப்பகுதியை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் செல்வம் தனது நண்பர்களுடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் திடீரென்று கத்தியால் செல்வத்தை வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதற்கிடையே செல்வத்தின் நண்பர்கள் ஒன்று திரண்டு, கத்தியால் குத்தியவர்களை தேடினர். அப்போது மார்க்கெட் பகுதியில் அவர்கள் வைத்திருந்த பேனரை கத்தியால் கிழித்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story