பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்
x
தினத்தந்தி 9 April 2022 4:30 PM IST (Updated: 9 April 2022 4:16 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி, 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி ஒன்று உள்ளது. 

இந்த பள்ளியில் தாமஸ் சாமுவேல் (வயது 57) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. 

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story