சொத்து தகராறில் பயங்கரம்: அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பி கைது..!


சொத்து தகராறில் பயங்கரம்: அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பி கைது..!
x
தினத்தந்தி 9 April 2022 6:19 PM IST (Updated: 9 April 2022 6:19 PM IST)
t-max-icont-min-icon

கீரனூர் அருகே சொத்து தகராறில் அண்ணனை காலால் மிதித்துக் கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை, கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவருக்கு நான்கு தம்பிகள் இரண்டு தங்கைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் சொத்தை பிரித்து தரச்சொல்லி பழனிச்சாமியின் நான்காவது தம்பி சிவசாமி (52) அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பிடாரியம்மன் கோவில் அருகில் உள்ள வயல்வெளியில் பழனிச்சாமிக்கும் சிவசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது அப்போது தகராறு முற்றி போய் அண்ணன் பழனிச்சாமியை கீழே தள்ளி தலையைத் தரையில் மோதி காலால் மிதித்தும் உள்ளார்.

இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கீரனூர் போலீசார் பழனிச்சாமியை காலால் மிதித்து கொன்ற தம்பி சிவசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story