'என்டெ பேரு ஸ்டாலின்': கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் மலையாளத்தில் பேசிய தமிழக முதல் - அமைச்சர்
கேரளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
கண்ணூர்,
கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23-வது மாநில மாநாடு, கேரளாவின் கண்ணூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மத்திய - மாநில அரசு உறவுகள் எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தனது உரையின் போது சில நிமிடங்கள் மலையாளத்தில் பேசி முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசி அசத்தினார்.
தமிழக முதல்- அமைச்சர் மலையாளத்தில் பேசியதன் விவரம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டியுடெ 23-ஆம் சம்மேளனத்தில் ஞான் பங்கெடுக்கணம் - எண்ணு - பஹுமானப்பட்ட கேரள முக்கிய மந்திரி பினராயி விஜயன் பறஞ்சப்போள் – ஞான் உடனெ சம்மதிச்சு.
(தமிழாக்கம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலான 23 ஆவது மாநாட்டில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் என்னிடம் கேட்டதுமே நான் உடனடியாக ஒப்புக் கொண்டேன்.)
தமிழ்நாட்டில் அசெம்ப்ளி நடக்குன்னதின்டெ திரக்குகள் உண்டெங்கிலும், ஈ சம்மேளனத்தின்டெ பாகம் ஆவுக என்னுள்ளது, பலவித காரணங்கள் கொண்டு ஞான் எண்டெ கடமையாயிட்டு கருதுண்ணு.
(தமிழாக்கம்: எங்கள் மாநிலத்தில் சட்டமன்றம் நடந்து வந்தாலும் - இங்கு வருவதை - இந்த மாநாட்டில் கலந்து கொள்வதை நான் எனது கடமையாகக் கருதுகிறேன்.)
சகாவு பிணராயி விஜயன் எனிக்கு தருன்ன ஸ்னேஹம் ஒரு முக்கிய காரணமாணு.
(தமிழாக்கம்: தோழர் பிணராயி விஜயன் என்னிடத்தில் காட்டும் அன்பு அதற்கு முக்கியக் காரணம் ஆகும்.)
சரித்ரபரமாயி நோக்கியால், சங்ககாலம் முதல் தொடருன்ன கேரள - தமிழ்நாடு பந்தம் - எந்துகொண்டும் எனிக்கு இதில் பங்குசேரானுள்ள மற்றொரு காரணமாணு. (தமிழாக்கம்: தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் சங்ககாலம் தொட்டே வரலாற்றுரீதியாக இருந்து வரும் பிணைப்பும் நட்பும் காலம் காலமாகத் தொடர்வது மற்றொரு காரணம்.)
திராவிட - கம்யூனிஸ்ட் முன்னேற்றங்களுக்கு இடையிலுள்ள பந்தம் 80 வர்ஷங்களுக்கு மேல் ஆழமுள்ளதாணு.
(தமிழாக்கம்: திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்குமான நட்பு என்பது 80 ஆண்டுகள் பழமையானது.)
தந்தை பெரியார் 1932-இல் தன்னெ, கம்யூனிஸ்ட் மேனிஃபெஸ்டோ - தமிழிலேக்கு மொழிமாற்றி பப்ளிஷ் செய்திட்டுண்டு - இது நிங்கள்க்கும் அறியாமல்லோ!
(தமிழாக்கம்: கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 1932-ஆம் ஆண்டே தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார் என்பது உங்களுக்குத் தெரியும்.)
அதோடொப்பம், லெனின் என்னும் ரஷ்யா என்னும் - குட்டிகள்க்கு திராவிட பிரஸ்தானம் பேருகள் நல்கியிட்டுண்டு.
(தமிழாக்கம்: இன்னும் சொன்னால் லெனின் என்றும், ரஷ்யா என்றும் பிள்ளைகளுக்கு பேர் வைத்த இயக்கம் திராவிட இயக்கம்.)
எல்லாத்தினும் மேல், என்டெ பேரு ஸ்டாலின். இதினெகாளும்; நிங்கள்க்கும் எனிக்குமுள்ள பந்தத்தை அடையாளப்படுத்தான் மற்றொரு காரணமும் ஆவஷ்யமில்லா.
(தமிழாக்கம்: அனைத்துக்கும் மேலாக - என்னுடைய பெயர் ஸ்டாலின். இதை விட உங்களுக்கும் எனக்குமான நட்புக்கு அடையாளம் தேவையில்லை.)
அதுகொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டியுடெ ஈ சம்மேளனத்தில் - ஞான் தமிழ்நாடு முக்கிய மந்திரி ஆயிட்டோ, ஒரு பார்ட்டியுடெ நேதாவாயிட்டோ அல்ல வந்நிரிக்குன்னது. மறிச்சு, நிங்களில் ஒராளாயி ஆ அவகாசத்தோடு கூடியாணு.
(தமிழாக்கம்: எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டுக்கு ஒரு கட்சித் தலைவராக - ஒரு மாநிலத்தின் தலைவராக அல்ல - உங்களில் ஒருவனாக உரிமையுடன் நான் வந்திருக்கிறேன்.)
ஆத்யமாயி, நிங்களுடெ முக்கிய மந்திரி திரு. பிணராயி விஜயனெ ஞான் அனுமோதிக்குந்நு.
(தமிழாக்கம்: முதலில் உங்கள் மாநிலத்தின் முதலமைச்சர் பிணராயி விஜயன் அவர்களை நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.)
அது, நிங்களுடெ முக்கிய மந்திரியாயி - தன்டெ கடமைகள் நன்னாயி நிர்வஹிக்குன்னது கொண்டு மாத்ரம் அல்ல.
அதோடொப்பம், இந்தியாவிலுள்ள முக்கிய மந்திரிமாரில், ஒரு "Iron Man"" ஆயிட்டு வேறிட்டு நில்குன்னது கொண்டுமாணு.
(தமிழாக்கம்: கேரளாவின் முதலமைச்சராக அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என்பதற்காக மட்டுமல்ல - இந்தியாவில் மாநில முதலமைச்சர்களில் இரும்புமனிதராக அவர் செயல்பட்டு வருகிறார்.)
State Rights - Secularism – Equality - Fraternity -Women’s Rights - இதிண்டெயொக்கெ முகமாணு - சகாவு பிணராயி விஜயன்.
(தமிழாக்கம்: மாநில சுயாட்சி - மதச்சார்பின்மை - சமத்துவம் - சகோதரத்துவம் - பெண்ணுரிமை ஆகியவற்றின் அடையாளமாக மாண்புமிகு பிணராயி விஜயன் அவர்கள் இருக்கிறார்கள்.)
Related Tags :
Next Story