மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன போராட்டம்


மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன போராட்டம்
x
தினத்தந்தி 9 April 2022 2:09 PM GMT (Updated: 2022-04-09T19:39:23+05:30)

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி நூதன போராட்டம் நடந்தது

புதுச்சேரி
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர், மின்சார கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் புதுவை சுதேசி மில் அருகே கியாஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி மாலை வைத்து நூதன போராட்டம் நடந்தது. விறகு அடுப்பு வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். புறநகர் பகுதி பொதுச்செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் அரிகிருஷ்ணன், ராம அய்யப்பன், ஆனந்த், பிராங்கிளின் பிரான்சுவா, ரூபன் கிறிஸ்டோபர் தாஸ், சக்திவேல், ருத்ரகுமரன், சோமநாதன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல்பட்டுரோஸ், கோபாலகிருஷ்ணன், கலிவரதன், சங்கர், பழனிவேலன், சரவணன், சரவண பெருமாள், கருணாகரன், தென்னரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். 
போராட்டத்தின்போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

Next Story