ஈச்சனாரி விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அமைச்சர் சேகர்பாபு


ஈச்சனாரி விநாயகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அமைச்சர் சேகர்பாபு
x
தினத்தந்தி 9 April 2022 9:33 PM IST (Updated: 9 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கோவில்களில் ஆய்வு பணியின் போது பக்தி பரவசத்துடன் அமைச்சர் சேகர்பாபு தங்க தேர் இழுத்தார்.

கோவை:

தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று பல்வேறு கோவில்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். தொடர்ந்து மாலையில் கோவையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் ஆய்வு செய்தார்.

அப்போது கோவிலில் நடைபெற்று வரும் பக்தர்களுக்கான சிறப்பு வசதிகளை பார்வையிட்டார். பின்னர் பக்தர்களுக்கான கூடுதல் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை முதன்மை ஆணையாளர் குமரகுருபரன், இணை ஆணையாளர் செந்தில்வேலவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு  பக்தி பரவசத்துடன் தங்கத்தேர் இழுத்தார்.

Next Story