பா.ஜ.க.வினர் இந்தியை படிக்க கட்டாயப்படுத்த மாட்டார்கள்


பா.ஜ.க.வினர் இந்தியை படிக்க கட்டாயப்படுத்த மாட்டார்கள்
x
தினத்தந்தி 9 April 2022 11:34 PM IST (Updated: 9 April 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க.வினர் இந்தியை படிக்க கட்டாயப்படுத்த மாட்டார்கள் பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் 15 குழுக்கள் அமைத்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஜல்சக்தி திட்டம், மக்கள் மருந்தகம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 90 சதவீதம் பெண்கள் பா.ஜ.க.வுக்கு வாக்கு அளித்துள்ளனர். கொரோனா காலத்தில் வழங்கியது போன்று மேலும் 6 மாதங்கள் ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ இலவச அரிசி பிரதமர் வழங்கி வருகிறார். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 38 லட்சம் கிராமங்களில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை. பா.ஜ.க. அரசு ஊழலற்ற அரசாக திகழ்கிறது. மத்திய அரசின் திட்டம் சாமானிய மனிதருக்கும் சென்றடைய வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். அதற்கான வேலைகளை நாங்கள் தொடங்கி உள்ளோம். ரஷ்யா-உக்ரைன் போரால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவில் பொருளாதாரம் வலுவாக உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. வெளிநாட்டு மொழிகளை கற்பதற்கு இந்தியை படிக்கலாம் என்று தான் கூறி உள்ளார். பா.ஜ.க.வினர் இந்தியை படிக்க கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story