கோயம்பேடு சந்தையில் கணிசமாக குறைந்த காய்கறிகள் விலை
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரிப்பால் விலை கணிசமாக குறைந்துள்ளது.
சென்னை,
கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ரூ. 20 க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ரூ.14 ஆகவும், சின்னவெங்காயம் ஒருகிலோ ரூ.30க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் ரூ.30க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் விலை 20 ரூபாய்க்கும், எலுமிச்சை ரூ.150க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
காய்கறிகளின் விலை குறைவு குறித்து வியாபாரிகள் கூறும்போது, வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வரத்து இருப்பதால், தற்போது விலை குறைவாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story